திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில் “வேதாந்தா நிறுவனம் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். தமிழக அரசின் வழக்கறிஞர் இந்த வழக்கில் வாதாட தகுந்த தயாரிப்புகளுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் இது குறித்த கலந்துரையாடல் உள்ளிட்ட பணிகள் காலை 10 மணிக்குத்தான் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த தயாரிப்புகளை ஒரு நாளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக சி.எஸ். வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்” என்றும் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மோசமான ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு வேண்டுமென்றே இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.