தமிழகம்

குழந்தைகளை குறிவைக்கும் செக்ஸ் டூரிஸம்

சென்னை அயனாவரத்தில் 12 வயது குழந்தை அவள் வயதை விட அதிகமான எண்ணிக்கையிலான ஆண்களால் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறாள்.
மனித மனம் விசித்திரமானது அன்பு பாசம் காதல் போல வன்மத்தையும் சேர்த்தே சுமந்து கொண்டு அலைகிறது என்பதை தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
தாத்தா மாமா அண்ணா என தான் அந்த குழந்தை அந்த மிருகங்களை உறவு கொண்டு அழைத்திருக்கும். இந்த மாமாக்களும் தாத்தாக்களும் தன்னை கடித்து குதறும் என அந்த குழந்தை எதிர்பார்த்திருக்க மாட்டாள் இதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அந்த குழந்தைக்கு புரிய வைக்காதது தான் அவளின் தாய் செய்த முதல் குற்றம்.
குடும்ப உறவு முறைகளால் தான் குழந்தைகள் பாலியல் ரீதியாக பெருமளவில் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை.
எந்நேரமும் இந்த குற்றம் யார் வீட்டிலும் நடக்கலாம். எங்கெல்லாம் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் குழந்தைகள் ஏதோ ஒரு விதத்தில் துற்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை
அத்தனை மனிதர்கள் நடமாடும் இடத்தில் ஒரு குழந்தை தொடர்ந்து 7 மாதம் 17 பேரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது இதுயார் கண்ணிலும் படாமல் இருந்ததும் ஒருவருக்கு கூட சந்தேகம் வராமல் இருந்ததும் வியப்பு தான். அப்படியா நாமெல்லாம் இயந்திரமாகி போய்விட்டோம் என்பதுவும் மனதை உறுத்தும் கேள்வி தான்
தேசிய குற்றஆவண தகவலின் படி எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்கொடுமைக்கு ஆளாகிறதாம்.
2007 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் படி
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளனராம். ஆனால் நாம் பேசுவது பெண் குழந்தைகளை பற்றி மட்டுமே.
இது ஏன் நடக்கிறது? இதற்கு தீர்வென்ன? அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆத்திரப்படும் நாம் நம் குழந்தைகளை எப்படி பாதுக்காக்க போகிறோம். நம்மை சுற்றியும் நம் குழந்தைகளை சுற்றியும் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகள் தான் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். குழந்தைகள் விசயத்தில் அனைவரிடமும் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள் தவறே இல்லை.
17 பேரில் ஒருவருக்கு கூட இது தவறு பாவம் எனத் தோன்றவில்லை எனில் ஆண் சமுதாயத்தின் மீது எப்படி நம்பிக்கையும் மதிப்பும் வரும்.
கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் தண்டனைகள் கடுமையாக்க வேண்டும் வக்கீல்கள் ஆஜராக மாட்டோம் இப்படி நிறைய ஆண்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம் என்றாலூம் 17 பேரின் முகமுடி மட்டுமே விலகி உள்ளது இன்னும் அக்கம் பக்கத்தில் எத்தனை பேர் இருப்பார்களோ என்ற பயமும் நமக்கு தோன்றத்தான் செய்கிறது.
அந்தவகையில் சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான “பீடோ ஃபைலிக்“மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.
அமெரிக்காவின் திஙிமி தொடங்கி மிழிஜிஸிணிறிளிலிணி வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன.
நம் நாட்டில் மும்பை, கோவா, புனே, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள்.
நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.
‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.
ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.
இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.
அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை – வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’. ஆண்குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்
குழந்தைகள் தொலைந்துவிட்டால்…
நாம் என்ன செய்ய வேண்டும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர்.
எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள்.
இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்.
கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்.
எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது. ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது. நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button