3 மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிய 60 வயது மூதாட்டி…!
கடந்த 45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் சில கட்டுபாட்டுகளுடன் இன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. 2 காவலர்கள் 2 ஊர்காவலர் படை, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 33 அரசு மதுபானக்கடை இயங்கி வந்தன. தற்போது இதில் 19 அரசு மதுபானகடை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி டவுணைச் சுற்றியுள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் காலை முதலே மதுப்பிரியர்கள் மதுகடையை நோக்கி சென்று ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதில் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் காலை முதலே சுமார் 3 மணி நேரம் காத்திருந்து அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி 4 மதுபாட்டில்களை வாங்கிச்சென்றார்.