தமிழகம்

பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை

பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் மேலாளர், நடத்துனர் உட்பட மூவர் ஒருவரை ஒருவர் தாக்கி, சண்டையிட்டதால் மூவர் மீதும் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தை திடல் அருகே உள்ளது அரசு போக்குவரத்து கழக பணிமனை. இங்கிருந்து மதுரை, திருச்சி, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கபடுகிறது. பணிமனை மேலாளராக இருளப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பரமக்குடி பணிமனையின் கீழ் 100 க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துனர்கள் பணிபுரிகின்றனர்.

இப்பணிமனையில் நிரந்தர பணியாளர்கள் தனது பணியில் விடுப்பு எடுக்கும் போது அன்றைய நாளில் பணி ஆப்சென்ட் செய்வதும், பிறகு வேறு நாளில் கூடுதல் பணி நாள் பார்த்தால் பாதி சம்பளம் அளித்தும் தொழிளாளர்களின் தினசரி வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழக்கவைக்கும் நோக்கத்தில் மேலாளர் இருளப்பன் செய்து வருவதாக போக்குவரத்து தொழிளளர்கள் மத்தியில் புகாரும், தொடர்ந்து அதிருப்தியும் நீண்ட நாளாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இங்குள்ள பணிமனையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நடத்துனர் ஆக பணிபுரிந்து வருகிறார். மேலாளர் இருளப்பன், நடத்துனர் ராஜாவிற்கு தொடர்ச்சியாக ஓய்வளிக்காமல், பணிமனையில் உதிரியாக உள்ள பேருந்துகளில் பணியாற்றுமாறு கட்டாயபடுத்தி தொடர்ந்து பணி வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் 27 ஆம் தேதி அதிகாலையில் பரமக்குடியில் இருந்து திருச்சி சென்று மீண்டும் அன்று மாலை 4 மணிக்கு பரமக்குடி வந்து பணியை முடித்துள்ளார் நடத்துனர் ராஜா. இவரை தொடர்ந்து இரவு 8 மணிக்கு திருச்சி பேருந்தில் பணி ஒதுக்கபட்டுள்ளது எனவும், தொடர்ந்து மறுநாள் காலையில் 8 மணிக்கு சீர்காழி பேருந்தில் பணியாற்ற செல்லுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

இதனை மேலாளர் இருளப்பனிடம் தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளுமாறு ஆட்சேபித்து ஓய்வு அளிக்காமல் பணி தரப்படுகிறது என நடத்துனர் ராஜா, மேலாளரிடம் முறையிட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றி, இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பணிமனை கட்டுபாட்டாளராக பணிபுரியும் செந்தில் என்பவரும் மேலாளருக்கு ஆதரவாக செயல்பட்டு, இருவரும் சேர்ந்து நடத்துனர் ராஜாவை தாக்கியுள்ளனர்.

மேலாளர் இருளப்பன் மற்றும் நடத்துனர் ராஜா இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடத்துனர் ராஜா புகாரில் மேலாளர் இருளப்பன், பணிமனை கட்டுபாட்டாளர் செந்தில் ஆகிய இருவர் மீதும், மேலாளர் இருளப்பன் புகாரில் நடத்துனர் ராஜா மீதும் பரமக்குடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள கட்டுபாட்டாளர் செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் நடத்துனருக்கு ஆதரவாக பனிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றது போக்குவரத்து ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேலாளர் இருளப்பன் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளியே உலாவிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சம்பவம் குறித்து கேட்டபோது எதுவும் கூறமுடியாது என கூறி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். காலை நான்கு மணி அளவில் தொழிலாளர் சங்கம் சார்பில் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button