தமிழகம்
பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டு தீர்மான நகலை, அமைச்சரிடம் வழங்கிய நிர்வாகிகள்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் 200 -க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு கலந்தாய்வு செய்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
அதன்படி பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அதை தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகளிடம் தமிழ் நாடு பத்திரிகையாளர் நல சங்க நிர்வாகிகள் கொடுத்து வருகிறார்கள்.
அதனையொட்டி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலுடன், கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்ற ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்.