இந்தியாதமிழகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் : அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்!

ஈராக், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இது சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈராக், வட ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய கிழக்காசியா ஆகிய பகுதிகளில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் சேர பலர் சிரியாவிற்கு சென்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தமிழகத்திலும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு ஐஜி அலோக் மிட்டல் பேசுகையில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தில் 33, கேரளாவில் 17, உத்தரப் பிரதேசம் 19, தெலங்கானா 14, மகாராஷ்டிரா 12, கர்நாடகா 8, டெல்லி 7 பேர் அடங்குவர். இதேபோல் உத்தரகாண்ட், மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருப்பது தெரியவந்தது. அதாவது சாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதபோதகரின் பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக அலோக் மிட்டல் தெரிவித்தார்.

மும்பையை சேர்ந்த சாகிர் நாயக், பீஸ் டிவியை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பேச்சு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறி, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.

இவர் அல்கொய்தா அமைப்பை ஆதரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பலரை பயங்கரவாதத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும், பேச்சு, போதனைகள் மூலம் வெவ்வேறு சமூகத்தினர் இடையே பகைமை உணர்வை தூண்ட முயற்சித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள இவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய இண்டர் போல் உதவியை நாடியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button