சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், சாலமன் பாப்பையா எழுதியுள்ள புறநானூறு புதிய வரிசை வகை நூல் இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டிய புத்தகம். புறநானூறு புதிய வரிசை நூல் எப்படியோ மக்களுக்கு சென்று சேர்ந்தால் நல்லது தான். ராமயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை என்றார்.
நான் விழாவுக்கு வந்து பார்வையாளனாக இருக்கிறேன் பேசவில்லை என்று கூறினேன். புத்தகத்தின் முன்னுரையை படித்தவுடன் இந்த புத்தகத்தை பற்றி பேசக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். சில புத்தகங்களை படிப்போம், சிலவற்றை எடுத்து கொடுத்துவிடுவோம். சில புத்தகத்தை படிக்க வேண்டும் என எடுத்து வைப்போம். அதுபோல இந்த புத்தகத்தையும் நான் எடுத்து வைத்துவிட்டேன்.
இந்த விழாவில் திருச்சி சிவா எம்.பி.பேசுகையில், சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வரிசை வகை புத்தகத்தை அனைத்து நூலகங்களிலும் சேர்க்க வேண்டும். புத்தகத்தை நூலகத்தில் தமிழக அரசு சேர்க்காவிட்டால், ஸ்டாலின் முதல்வரானதும் சேர்ப்பார் என கூறியிருந்தார். அதற்கு அடுத்தப்படியாக பேசிய அமைச்சர் பாண்யராஜன் அதை நாங்களே நூலகங்களில் வைத்து விடுகிறோம் என்று கூறினார்.
மேலும் காலம் எப்போதும் பேசாது. ஆனால், எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும். இலக்கிய கடலில் முத்து எடுக்கின்ற அறிவு சலமனுக்கு உண்டு. அவர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.