அரசியல்

மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உடனடியாக நவடடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் உள்ள செய்யது முகமது, அரசு ஆண்கள் மேல் நிலைபள்ளியில் கல்வியாண்டில் அணைத்து சமூக மாணவர்கள் பலரும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தொண்டி மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தலைமை ஆசிரியர் உள்பட 10.11.12.வகுப்பபிற்கு ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பள்ளியின் சுற்று சுவர் பல இடங்களில் இடிந்து உள்ளன இந்த நிலையில் சிலர் இரவு நேரங்கலில் உள்ளே நுழைந்து மது அருந்தல் போண்ற சட்ட விரோத செயலில் ஈடுபவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
எனவே, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் கவண ஈர்ப்பு ஆர்ப்பாடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button