தமிழகம்

நுழைவு வாயிலியே கட்டண விபரம் : தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையிலேயே மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இந்தநிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகள் கட்டண விவரம் குறித்து பள்ளி நுழைவாயில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவாயிலில் கட்டண விபரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
மேலும், கல்விக் கட்டண நிர்ணயக்குழு பரிந்துரை அடிப்படையில் கட்டணங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. “உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்வி கட்டண குழு ஒவ்வொரு வகுப்பிற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த கல்வி கட்டண விபரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை.
இதனால் கல்விக் கட்டண விபரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர்” என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனைக் ஏற்ற நீதிமன்றம் இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதி அளித்து வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றப்பட்ட புதிய இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், சாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்ற சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் என்ற சிறுவன், சாலையில் இருந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இதனையடுத்து அந்த சிறுவனை அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், அந்த சிறுவனின் கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில் சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு ஒன்று, இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், ஆத்திசூடி – நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் சிறுவன் யாசினின் புகைப்படத்துடன், அவரின் செயல் விளக்கப்பட்டு உள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி குறித்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சந்திப்பு பற்றிய கட்டுரையில் சிவாஜி அவர்கள் மது அருந்தி விட்டு தங்களிடம் நடித்துக் காட்டியதாக எழுதியிருப்பார். இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button