எம்.பி.க்கு தம்பி பாப்பா: அதிர்ச்சியில் அதிமுகவினர்: குஷியில் அமமுகவினர்…
அமமுகழகத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பியின் தந்தைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் எம்பியின் தந்தைக்கு எதிராக திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று கூறினார்.
இது குறித்து நாம் விசாரித்தபோது அந்த எம்பி சென்னையை சேர்ந்தவர். அவரின் தந்தையும் சென்னையில் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அரசின் அமைச்சரவையில் இருப்பதாகவும் தெரியவந்தது. இளம்பெண் ஒருவர் தனது வீட்டுப்பிரச்சனை தொடர்பாக தனது தாயாருடன் வந்து சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்பியின் தந்தையை சந்தித்திருக்கிறார். அதற்கு பிறகு அந்த இளம்பெண்ணை தென்மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று தங்கியது மற்றும் பெண்ணின் குடும்பத்தாருடன் போனில் பேசியது என அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறார்கள் வெற்றிவேல் தரப்பினர். இவையனைத்தும் எம்.பியின் தந்தைக்கு தெரியவில்லையாம். அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்தபோது தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வற்புருத்தி அந்தப் பெண்ணின் எதிர்கால தேவைகள் அனைத்தையும் செய்து கொடுப்பதாக பேசியிருக்கிறார் எம்.பியின் தந்தை. அதற்கெல்லாம் சமாதானம் ஆகாமல் சட்டப்பூர்வமான அங்கீகாரம் வேண்டும் என்பதால் பிடிவாதமாக குழந்தையையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் அந்த இளம்பெண். அந்தக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எம்பியின் தந்தையின் பெயரை சேர்த்திருக்கிறார்களாம். இந்த விஷயம் காட்டுத்தீயாக அமமுகழகத்தினர் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது. 18 எம்.எல்.ஏ.களின் வழக்கில் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் இந்த செய்தி அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
இதுகுறித்து அதிமுக, அமமுக நிர்வாகிகள் கூறும்போது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உயர்பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் வகிக்கும் பதவிக்கும், கழகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தாமல் இருந்தால் மக்களுக்கும், கழகத்தினருக்கும் நல்லது என்றனர்.