அரசியல்

இஸ்லாமியர்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல்… : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டணம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
மத்திய பிரதேசம் சியோணி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பெண் உட்பட 3 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பசு குண்டர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 இஸ்லாமிய இளைஞர்கள் மீது பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதணையும் அளிக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள், ஜெய் ஸ்ரீராம்“ என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் சியோனி என்றபகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது .இச்சம்பவம் இஸ்லாமியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திள்ளது.
மோடி கடந்த முறை, ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் இஸ்லாமியர்கள் மீதும் தலித்கள் மீதும் கொலை வெறி தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற நிலையில் பசு குண்டர் பயங்கரவாதிகளின் அட்டகாசம் தொடர்வதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாதது. பசு குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு குற்ற செயலில் ஈடுபடுவதை கடும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை மத்திய மாநில அரசு கடை பிடித்து வருவது கண்டனத்துக்குறியது.
மனிதாபிமானமின்றி தொடர்ந்து அப்பாவி இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வரும் பசு குண்டர்களை மத்திய மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டும் அடக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களின் மீது திட்ட மிட்டு தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி இஸ்லாமியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button