இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பேருந்து நிலையத்தில் கட்சி கொடியினை ஏற்றிய பிறகு தேவிபட்டினத்தில் உள்ள இந்திரா மஹாலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உத்தரவின் பேரில், மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வழிகாட்டுதலின் பேரில் புதிய நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இராமநாதபுரம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில்,மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன்,மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர்,மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி,மண்டல செயலாளர் திரவியம்,கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர்,மாவட்ட பொருளாளர் கேசவன்,ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டம்,நகரம்,ஒன்றியம் போன்ற பொறுப்புகளுக்கு தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்சி நிர்வாகிகள் பொறுப்புகள் வழங்க கோரி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கட்சியின் படிவத்தை பூர்த்தி செய்து மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினர்.