லண்டனில் வேலை பார்த்த பட்டதாரிப் பெண் தேர்தலில் போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் நகராட்சி 3வது வார்டில் லண்டன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ரதிசேகர் தனது வேலையை உதறி தள்ளிவிட்டு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
குற்றாலம் நகராட்சி 8 வார்டுகள் கொண்ட சிறிய நகராட்சி தான். ரதி சேகர் போட்டியிடும் 3வது வார்டில் சுமார் 250 வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கனவே இவரது தந்தை சேகர் இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தற்போது இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டதால் லண்டனில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தனது மகளை களமிறங்கியுள்ளார்.
இவர் தனது வார்டில் உள்ள வாக்காளர்களின் பெயர் விபரங்களை தனது கையடக்க மின்னனு லேப்டாப்பில் பதிவிறக்கி வைத்துள்ளார். வாக்காளர்கள் கூறும் ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் பதிவு செய்துகொள்கிறார். வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது முக கவசம் அணியாத பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா தொற்றின் ஆபத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு தலைமுறைகளாக இவரது குடும்பத்தினர் இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டதால் இவரது தந்தை சேகர் தனது மகளை களமிறக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.