தமிழகம்

உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து சில்வர் பதக்கம் வென்று சாதனை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த திருப்பதி மற்றும் நாகராஜ் ஆகியோர் கராத்தே பயிற்சி நடத்தி வருகின்றனர். இவர்களிடம் மாற்றுத்திறனாளி மாணவன் தர்ஷன் தன்னை கராத்தே பயிற்சியில் சேர்க்க முடியுமா என்று தாழ்வு மனப்பான்மையோடு கேட்டுள்ளான். இவனை உலக அளவில் கராத்தேயில் சாதனை செய்து பதக்கம் வாங்கித் தருவதாக சபதமெடுத்து இரண்டு ஆசிரியர்களும் ஒரு வருடத்திற்கு மேலாக கடுமையான பயிற்சிகள் தர்ஷனுக்கு வழங்கி கடந்த மே 19 முதல் 29 வரை கோவாவில் பனாஜி என்ற இடத்தில் உள்விளையாட்டு அரங்கில் உலக அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்க பல உலக நாடுகள் முதல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று இப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருநகர் பகுதியில் உள்ள கௌதம், பவன், சங்கர், லதா, கீர்த்தனா, வைசாலி ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்று உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர். மேலும் சிவசங்கர் பிரகதீஸ்வர நான்சி ராஜவர்மன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மகாராஷ்டிர மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். கட்டா பைட்டிங் ஆகிய போட்டிகளிலும் பங்கேற்று கருப்பு பட்டயம் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்கள் தமிழகத்திற்கு புகழை வாங்கி தந்துள்ளனர். இப்போட்டி அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா என்பவர் தலைமையில் 8 வயது முதல் 12 வயது வரையிலான கராத்தே போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் நடைபெற மாணவர்களை ஊக்கப்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க சென்னை சேர்ந்த கண்ணன் மற்றும் மதுரையை சேர்ந்த மணிகண்டன் திருப்பதி ஆகியோர் முயற்சியில் தமிழகத்திற்கு பேரும் புகழையும் வாங்கித் தந்ததாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்க தமிழகத்திற்கு தங்கம் சில்வர் வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
உடலில் ஊனம் என்பது பொய் மனதில் திடம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு தர்ஷன் ஒரு எடுத்துக்காட்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button