தமிழக அரசுக்கு தற்போது வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பதே டாஸ்மாக் நிறுவனம் தான். குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளில் பார் வசதியையும் தமிழக அரசே ஏற்பாடு செய்து அதனை ஏலம் விட்டு வருவாய் ஈட்டுவது அரசின் வாடிக்கையாக உள்ளது. இந்த பார்கள் ஏலம் விட்டதில் பல இடங்களில் பணம் அதிகமாக நிர்ணயித்ததால் பல பார்கள் ஏலம் போகாமல் மூடப்பட்டது. சில இடங்களில் மாமூல் பெற்றுக்கொண்டு பார்களை நடத்த அனுமதித்தனர்.
நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு கடை மட்டும் தொடர்ந்து செயல்படுவதுதான் வியப்பாக உள்ளது.
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை தமிழக அரசால் முறையாக மூடப்பட்டது. ஆனால் தவறாக தொடர்ந்து செயல்பட்டுத்தான் வருகிறது. MDS என்ற ஒரு பேக்கரி கடை நிறுவனம் இந்தக் கடையில் தொடர்ந்து மது விற்பனை செய்கிறது. இங்கு மது அருந்தும் குடிமகன்கள் இங்கு விற்கப்படும் சரக்கில் போதை ஒன்றும் இல்லை. இது கள்ளச்சாராயம் மாதிரி இருக்கிறது. இது பாண்டிச்சேரி சரக்கு, இது கோவா, கேரளா சரக்கு என்றும் பலரும் பலவிதமாக தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால் எந்த சரக்கோ முறைகேடாக இந்த MDS பேக்கரி நிறுவனம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்வது சட்டவிரோதமானது. பொதுமக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தை அருகே MDS பேக்கரி நிறுவனம் பேக்கரி கடை நடத்தினால் நல்லது. தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வேண்டாம் என்றால் அதையும் மீறி சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பது கண்டிக்கத்தக்கது.
இந்த MDS நிறுவனம் கோவை மாவட்டத்தில் முறையாக டாஸ்மாக் பார் ஒன்று டெண்டர் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால்
MDS நிறுவனத்திற்கு போலி மதுபானம் எங்கு கிடைக்கிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. இந்த MDS உரிமையாளர்கள் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எங்களுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை தெரியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தெரியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியைத் தெரியும் என்று கூறி பலரையும் மிரட்டுகிறார்கள். இதேபாணியில் காவல்துறையினரையும் மிரட்டுவதாக தெரிகிறது. உண்மையிலேயே இவர்கள் மந்திரிகளின் தொடர்பில் உள்ளார்களா? இல்லை விஞிஷி குண்டர்படை போலியாக அனைவரையும் மிரட்டுகிறதா? என்று செட்டிபாளையம் காவல்துறைதான் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இருந்து விஞிஷி போலியான டாஸ்மாக் பாரை மூட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
- சாகுல் ஹமீது