ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “வருகிற 7 ஆம் தேதி இஸ்லாமியர்களின் ஐந்து கடைமைகளின் மிக முக்கியமான நோண்பு வருகிறது இந்த நோண்பு காலங்களில் அணைத்து இஸ்லாமியர்களும் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைகளை கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமையின் ஒன்றாகும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி தமிழகத்தில் ஆட்சி எடப்பாடி கே பழனிசாமி மற்றும் ஒ பன்னீர் செல்வம் இனைந்து சட்ட ஒழுங்கை பாதுகாத்தும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார்கள்.
நோண்பு காலங்களில் தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கபட்டு வருகிறது அதே போல் இந்தாண்டும் அரசின் சார்பில் கூடுதலாக அரிசி வழங்க வேண்டுமெனவும் நோண்பு நாளில் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்காக இஸ்லாமியர்கள் இரவு நேரங்களில் தொழுகைக்கு சென்று வரும் 30 நாட்களுக்கும் தகுந்த பாதுகாப்பும் தடையில்லா மின்சாரமும் வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
ஆகவே நோண்பு 30 நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரமும் இஸ்லாமியர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் அளித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.