அன்வவர்ராஜா-வை அதிமுகவிலிருந்து நீக்கியது ஏன் ?
இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக அதிமுக வில் சசிகலாவிற்கு ஆதரவாக அன்வர்ராஜா பேசிவருவதாக அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.ஆனால் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு சசிகலா, தினகரன்,பண்ணீர்செல்வம், பழனிச்சாமி என தனித்தனி அணிகளாக செயல்படுவதால் தான் அதிமுக தோல்வியடைந்தது.பழனிச்சாமி தான் ஒரு எம்ஜிஆர் போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்ற உண்மையைத் தான் பேசினார் என்று அதிமுக தொண்டர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பழனிச்சாமியின் தூண்டுதலால் சிவி சண்முகம் அன்வர்ராஜாவுக்கு எதிராக ஒருமையில் பேசி அன்வர்ராஜாவை நீ சசிகலாவின் ஆதரவாளர் என்று பேசி அவமானப்படுத்தினார்.அப்போதே அன்வர்ராஜாவை அவமானப்படுத்தி கட்சியை விட்டு வெளியேற்ற நினைத்தனர்.
இந்நிலையில் இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.விரிவான செய்தி வரும் இதழில்..,.