உதவியாளர் உதவியிடன் TNPSC தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளி

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளர் உதவியுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் இன்று டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடியை சேர்ந்த கலீல் ரகுமான் என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வுக்கு முன்னதாகவே தமிழ், ஆங்கிலம் தெரிந்த ஒரு நபரை உதவியாளராக நியமிக்க வேண்டுமென விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் அனுமதி அளித்ததின் பேரில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலீல் ரகுமான் ஒரு ஆசிரியை உதவியுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார். உதவியாளர் வினாத்தாளில் உள்ள வினா மற்றும் விடைகளை எடுத்துக் கூறி அதற்கு மாற்றுத்திறனாளி விடைகளை கூறி தேர்வு எழுதினார். தேர்வு மையத்தில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள் ஆய்வு செய்தார்.





