எடப்பாடி பழனிச்சாமி சக்கரை வியாபாரத்திற்கும் பன்னீர்செல்வம் பால் வியாபாரத்திற்கும் செல்லவேண்டும்: டிடிவி தினகரன்
பரமக்குடி ஐந்து முனை சாலை மதுரை ராமேஸ்வரம் சாலையில் பிரச்சாரத்தை துவக்கிய டிடிவி தினகரன் பத்திரிகைகளும் ஊடகங்களும் தங்களைப் பற்றி செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருவதாகவும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்புவதாகவும் ஆர்கே நகர் இடைத் தேர்தலிலும் இதையே செய்தார்கள் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து ராமநாதபுரம் பாராளுமன்றம் தொகுதிக்கு வ.து.ந.ஆனந்த் பரமக்குடிசட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டாக்டர் முத்தையாவுக்கும் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
அமைதிப்படை சினிமாவைப் போன்று வந்தவர்கள் துரோகத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
பழனிச்சாமியை முதலமைச்சராக்க ஓட்டு போட்ட முத்தையாவை இடை நீக்கம் செய்து துரோகம் செய்தவர்கள் இவர்கள் ஆகவே துரோகம் செய்த இவர்கள் இந்த தேர்தலில் வெற்றி அடையவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி சக்கரை வியாபாரத்திற்கும், பன்னீர்செல்வம் பால் வியாபாரத்திற்கும், செல்லவேண்டும் இது தான் உண்மை என்றும் பேச்சின் இடையே ஸ்டாலின் போல மிமிக்ரி பேச்சு பேசிய போது நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் அவர்கள் பண மூட்டைகளை நம்பி இருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் வாக்குக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி கதைக்கு ஆகவில்லை. இது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கோட்டை இங்கே ராமநாதபுரத்தில் ஜெயிக்கலைன்னா தமிழகத்தில் எந்த பகுதியில் ஜெயிக்க முடியும் என்றும் டிடிவி கேள்வி எழுப்பினார். ராமநாதபுரம் புரட்சித்தலைவர் உடைய கோட்டை புரட்சித் தலைவரின் கோட்டையை எப்படி அம்மாவும் கோட்டையாக வைத்து இருந்தார்களோ அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நமது கோவில் கோட்டை காசு வாங்காமல் வந்த கூட்டம் இங்கே கடல்போல் நிற்கிறது. இந்தக் கூட்டத்தில் இருந்து பார்த்தாவே மக்கள் யார் பக்கம் என்பது எல்லாருக்கும் தெரியும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்&ன் கோட்டையாகவே அனைத்து தொகுதியிலும் வெற்றி அடைவோம். 18 தொகுதியில் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது இந்த தேர்தலில் தோல்வியுற்றால் பன்னீர்செல்வம் துரோகம் என்றால் பழனிச்சாமி பெரிய துரோகம் எட்டப்பன் எந்த ஊர்ல இருக்காரு யாருக்கும் தெரியாது ஆனால் இப்போது தெரிந்து விட்டது இனிமேல் பிறக்கிற குழந்தைகளுக்கு கூட பழனிச்சாமி பேருவைக்கக்கூடாது. பழனி வைக்கலாம் சாமி பழனிச்சாமி வைக்க கூடாது.
நாலடியார் ஒருவர் அமைச்சர் ஆக இருந்து கொண்டு அதிமுக வேஷ்டி கட்ட கூடாது என்று ஆட்டம் போடுகிறார். அவரும் ஒரு டாக்டர் தான். மணிகண்டன் குக்கர் சின்னத்தை தாங்கள் வாங்கி விட்டோம் என்று ஒரு மணிகண்டன் நம்பியார் காலத்து பார்முலா எல்லாம் இந்த காலத்தில் எடுபடாது என்று தொடர்ந்து பேசினார். துரோகம் என்றாலே எட்டப்பன் பெயர் மறந்து இனிமேல் எடப்பாடி, பன்னீர்செல்வம் பெயர்தான் ஞாபகத்திற்கு வரும் என்று திருவாரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார்.
திருவாரூர் தெற்கு வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாகை மக்களவை வேட்பாளர் செங்கொடி மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர் எஸ்.காமராஜ்க்கு பரிசுபெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய தினகரன், ‘’பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டும் இல்லாமல் மோடியை டாடி என்று அழைக்கும் துரோக கும்பலை விரட்டியடிக்கவும், இரண்டு ஆட்சிகளையும் வீழச் செய்யவும் பரிசுபெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். முதல்வராவதற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து அவர்களை துரோகி என்று கூறி வருகிறார் பழனிச்சாமி.
துரோகம் என்றாலே எட்டப்பன் பெயர் மறந்து இனிமேல் எடப்பாடி, பன்னீர்செல்வம் பெயர்தான் ஞாபகத்திற்கு வரும். நாட்டை வஞ்சித்த மோடியுடன் கூட்டணி வைத்துள்ளனர். கஜாபுயல் தாக்கிய போது மோடி வந்தாரா? ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த போது வந்தாரா? தேர்தலுக்காக மட்டும் திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு டவுன் பஸ்ஸில் செல்வது போன்று வந்து செல்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று கூறிய பாமகவுடன் கூட்டணி, படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்ற தேமுதிக வுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது மெகா கூட்டணி அல்ல, மானங்கெட்ட கூட்டணி. திருவாரூரில் அதிமுக டெபாசிட் வாங்காது என தெரிந்தவுடன் திமுக வேட்பாளர் காலில் அதிமுக வேட்பாளர் விழுந்து விடுவார். இன்னொரு கூட்டணியோ மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். நீங்க மதச்சார்பற்ற கூட்டணினா? நாங்க என்ன மது கூட்டணியா? மோடி ஆட்சியில் பயன் பெற்றவர்கள் அம்பானி, அதானி மட்டும் தான். ஜிஎஸ்டி பாதிப்பு, பணமதிப்பிழப்பு என மக்கள் வீதியில் நிற்கின்றனர். வடபாதிமங்கலத்தில் விவசாய பல்கலைகழகம் அமைத்துக் கொடுப்போம்‘’ என்றார்.
அண்மையில் பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பலவீனமாக வேட்பாளர்களை நிறுத்திட தனக்கு பாஜக தூது அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.
தினகரனின் இந்த பேச்சு, தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தினகரன் குற்றச்சாட்டு பொய் என்று கூறினார். எனினும் தினகரனின் பேச்சு தேர்தல் களத்தை பரப்பரக்கச் செய்துள்ளது. இந்நிலையில் கும்பகோணம் சுவாமிமலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பலவீனமாக வேட்பாளர்களை அமமுக சார்பில் போட்டியிட வைக்கக் கோரி பாஜக தூது அனுப்பியது உண்மையே என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், இடைதேர்தலில் அமமுக வெற்றிப்பெற்றால் திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளிக்காது. சட்டமன்ற தேர்தலில் அமமுக வெற்றிப்பெற்றால் ஆட்சி கலைக்கபப்ட்டு மீண்டும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.