தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழகத்தை வளர்ச்சியின் குறியீடாக வளர்ச்சியின் மாநிலமாக கொண்டு செல்வது தான் எனது இலக்கு என்று கூறினார்.
அப்போது, 44,525 பயனாளிகளுக்கு 238 கோடி ரூபாயில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். 98 கோடியில் முடிவுற்ற 90 பணிகளை திறந்து வைத்து 894 கோடி மதிப்புள்ள 134 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தஞ்சாவூர் பழயை பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டாம் உலக போரின் நினைவு மணிக்கூண்டு புணர்மைக்கப்பட்டுள்ளது அதனையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட்டையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெரிய கோயில், பெருமை வாய்ந்த கல்லனை, சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூர். அதுமட்டுமல்ல தலைவர் கலைஞருக்கு போராட்ட பயிற்சி கொடுத்ததும் தஞ்சாவூர்தான். கோயில் கட்டிய மாமன்னன் சோழன் சிலையை உள்ளே வைக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் தான் கோயில் வெளியே உள்ளது.
தஞ்சாவூர் என்றால் காவிரி, காவிரி பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் போது காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முதல் முதலில் வலியுறுத்தியவர் கருணாநிதி. காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் திராவிட கழகம். இங்கே, 48 ஆண்டுகளுக்கு பிறகு அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த சாதனைக்கு அரசு எடுத்த முயற்சி தான் காரணம். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டது. மானியத்தில் விதை வழங்கப்பட்டது. அதன் பலனாக 6 மாதத்தில் இந்த சாதனை செய்ய முடிந்தது. வேளாண் புரட்சிக்கு அடித்தளமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு மாதத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 50% நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது. சொன்னதை செய்யும் ஆட்சி கலைஞர் ஆட்சி. சொல்லாததையும் இப்போது செய்து கொண்டு இருக்கிறோம். கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டு வரும் விவசாயிகள் எந்த புகாரும் தெரிவிக்காத வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டி விரும்பி, வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தை வளர்ச்சியின் குறியீடாக. வளர்ச்சியின் மாநிலமாக கொண்டு செல்வது தான் எனது இலக்கு என்று கூறினார்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
– நமது நிருபர்