ஆர் எஸ் பாரதி கைதும்! பின்னணியும் !
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கைது செய்யப்பட்டார் . அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் தனியார் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் , அந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . இந்த புகார் சம்பந்தமாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு வருகிற 27 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் ஆர் எஸ் பாரதி நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் ஊழல்கள், பன்னீர்செல்வத்தின் மகன்களின் நிறுவனங்கள் முறைகேடான முதலீடுகள் பற்றி ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளார்.
கொரோனா கால ஊழல் மற்றும் அரசின் நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக மக்களை திசை திருப்புவதற்காக கைது செய்திருப்பதாகவும் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்தார்.
ஆர் எஸ் பாரதியை சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினார்கள். ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் ஆர் எஸ் பாரதியை ரிமாண்ட் பன்ன நீதிபதி மறுத்துவிட்டார். அவருக்கு இடைக்கால ஜாமினின் வழங்கியுள்ளார்.
ஆர் எஸ் பாரதி கைதுக்கு பல்வேறுஅரசியல் கட்சி தலைவர்கள் அதிமுக அரசின் பழிவாங்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.