அரசியல்

கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் : மு.க.ஸ்டாலின்

கொரோனாநோயால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை அண்ணா அறிவாலயம்வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தைஅரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் மாநகராட்சிஆணையரிடம் கடிதம் அளித்துள்ளார்.

தி.மு.க. அறக்கட்டளைக்குச்சொந்தமான ‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில்இருக்கும் ‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனாநோயால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அரசு சார்பில்பயன்படுத்திக்கொள்ளுமாறு தி.மு.க.அறக்கட்டளையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின்எழுதிய கடிதத்தை சென்னை தெற்கு மாவட்டக்கழகச் செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சென்னைகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர்ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில்சந்தித்து அளித்தனர்.

ஏற்கனவே, கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என்றும், மேற்கண்ட நிதி  ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை இல்லாமல் திமுக எம்எல்ஏக்கள் பலர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயமும் கொரோனா சிறப்பு பிரிவிற்கு கே.என் நேருவால்  ஒப்படைப்படைக்கப்பட்டது.

திருச்சி-  கரூர்புறவழிச்சாலையில்  சத்திரம்பேருந்து நிலையம் அருகே  திமுக சார்பில் முன்னாள்அமைச்சர் கே.என். நேருகலைஞர் அறிவாலயத்தை கடந்த 2008-ம் ஆண்டு அமைத்தார்.இதை அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதிதிறந்து வைத்தார்.

சுமார் 1000 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்ட இந்த கட்டடத்தில் திமுகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு திருச்சி கலைஞர் அறிவாலயமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை திமுக முதன்மைச் செயலாளர், கே.என்.நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் நேரில் வழங்கினார்.

ஏற்கனவே, அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக  இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமதுநிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button