மாதவரத்தில் டி_மார்ட் ஷோரூம்.. கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ! வாகன ஓட்டிகள் அவதி !
சென்னையை அடுத்த மாதத்தில் டி மார்ட் புதிய கடை திறப்பு விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மூலக்கடை செல்லும் கொல்கத்தா நெடுச்சாலையில் டி_மார்ட் என்ற நிறுவனம் புதியதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மாலை ஏழு மணி அளவில் மாதவரம் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பொதுமக்கள் இந்த கடைக்கு ஏராளமானோர் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதன் காரணமாக நெடுச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது 108 ஆம்புலன்ஸ் கூட ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களிலும் வருகின்ற பொதுமக்கள் வாகன நிறுத்துமிடத்தில் இடம் இல்லாததால் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால், சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதனை தடுக்கும் வகையில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடையின் நிர்வாகிகள் முன்கூட்டியே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இனிமேலாவது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
_கே.எம்.எஸ்