மாவட்டம்

பத்திரிகையாளர்களை தாக்கிய கோவில் ஊழியர்கள் ! உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் செய்தியாளர்கள் படம் பிடித்து செய்தி சேகரித்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர்களை பழனி திருக்கோயில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி, ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பழனி திருக்கோயில் ஊழியர்கள் தொடர்ந்து இதேபோல அத்துமீறலில் ஈடுபடுவதற்கு உதவி ஆணையர் லட்சுமி காரணமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கோயில் காவலர்களை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு, பழனி கோயில் நிர்வாகத்தில் தனக்கான தனி கூட்டத்தை வைத்து ஆளுமை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கடுமையாக நடக்கும் கோயில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அத்துமீறலுக்கு துணை போகும் உதவி ஆணையர் லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவருக்கும் கோயில் காவலருக்கும் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் கோயில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் தரப்பில் புகார் அளித்த நிலையில், கோயில் காவலர்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி நடந்த சம்பவத்தை திசை திருப்பியவர் உதவி ஆணையர் லட்சுமி.   தற்போது  பத்திரிக்கையாளர்கள் மீது கோயில் காவலர்கள் தாக்குதல் நடத்துவதை உதவி ஆணையர் லட்சுமி அரவணைத்து செல்வதை பார்த்தால், கோயிலில் காவல் பணியில் உள்ளவர்கள் பணியாளர்களா ? அல்லது ரவுடிகளா ? என்கிற கேள்வியும் எழுகிறது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடும் கோயில் காவலர்களை பணிநீக்கம் செய்வதோடு , கோயில் காவலர்களை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்தும் உதவி ஆணையர் லட்சுமி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

– சாதிக் பாட்ஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button