வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !

சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட போலீஸார், 5 ஆம் தேதி சென்னை M.K.B நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது பொது மக்களுக்கு அரசு விநியோகம் செய்யும் இலவச ரேசன் அரிசியை அப்பகுதி மக்களிடமிருந்து, குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற கொடுங்கையூர் ராஜரெத்தினம் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 50 கிலோ எடை கொண்ட 45 ரேசன் அரிசி மூட்டைகள் மொத்தம் 2,250 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தையும் ( TN 16 A 3760 ) பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நாகராஜ் மீது Cr No 37/2025 ன் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் நாகராஜ் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது இவர் ரேசன் அரிசி கடத்தலில் தொடர் குற்றவாளி என போலிசார் தெரிவித்துள்ளனர்.
– கே.எம்.எஸ்