மாவட்டம்

நகராட்சி ஆணையர் 11.70 லட்சம் பணத்துடன் காரில் சென்றபோது கைது !

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சப்பணம் பெற்றுக் கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் அந்த வாகனத்தில் இருந்துள்ளது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 13 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை தொடர்ந்துள்ளது.

பின்னர் அவரது அலுவலக அறையில் இருந்து ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில் கைப்பற்றிய பணம் அனைத்தும் லஞ்சமாக வாங்கியதுதான் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button