காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரின் தன்னலமற்ற சேவைக்காக, மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் !

இந்தியத் திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
அதேபோல் அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து அந்தந்த மாவட்டங்களில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஈடுபாட்டுடன் அரசு சாரா அமைப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சு. சுபாஷ் சீனிவாசனுக்கு, மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.