மாவட்டம்

பல்லடத்தில் அலங்கார பந்தல் அமைத்து, கூட்டுறவு சங்கத்தினர் ஜப்தி நடவடிக்கை !

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில். ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு சேமிப்பு கணக்குகளை துவங்கி, வைப்பு நிதியை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் வங்கியில் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 20 கோடி வரை வசூலாகாமல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் தொழில் அபிவிருத்தி கடனாக தலா 5 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ. 8350/- தவணையாக 5 ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டே கால அவகாசம் முடிந்த நிலையில் 13 ஆண்டுகளாக சுமார் 109 பேரிடம் இருந்து 6 கோடி வரை கடன் தொகை நிலுவையில் இருந்துள்ளது.

இதனிடையே அதிரடியாக நிலுவை தொகையை வசூலிக்க களம் இறங்கிய பல்லட்டம் கூட்டுறவு வங்கியின் அதிகாரிகள் முதல் கட்டமாக, தெற்குபாளையத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளரிடமிருந்து வரவேண்டிய சுமார் 17 லட்சம் கடன் தொகையை வசூலிக்க தறிக்குடோன் முன்பாக அலங்கார பந்தல் அமைந்து அதில், டேபில் மற்றும் சேர் போட்டு அமர்ந்து கொண்டுள்ளனர். பின்னர் தகவலின் பேரில் குடோனுக்கு வந்த தறி உரிமையாளர் குடோனை திறந்த போது அங்கு விசைத்தறிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தொழில் அபிவருத்திக்காக கடன் வாங்கி சுமார் 40 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் செய்துவரும் விசைத்தறியாளர் தனது வருமானத்தை மாற்று தொழிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு தவணை கூட செலுத்தாமல், 11 ஆண்டுகாலம் கடந்த நிலையில் அரசாங்கம் கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி கடன் கட்ட காலம் தாழ்த்தியதாக கடன் பெற்றவர்கள் கூற்றாக இருந்தது. மேலும் கடன் கொடுத்து 11 ஆண்டுகள் கழித்து தீவிர நடவடிக்கையின் முதல்கட்டமாக அலங்கார பந்தல் அமைத்து வசூலில் இறங்கியது கடனை வாங்கி கட்டத்தவறியவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button