மாவட்டம்

நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் !

சென்னையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்
அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் மாதவரம் பஸ் டெப்போ அருகே சுமார் 2,170 சதுர அடி கொண்ட அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்துள்ளார்.

அந்த உணவகம் இருப்பது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம். மேலும் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இந்த உணவகம் பெரும் இடையூறாக இருந்துள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு அந்த இடம் அரசுக்கு தேவைப்பட்டுள்ளது.  இதனால் நெடுஞ்சாலை துறையினர் உயர் நீதிமன்றத்தில் உணவகத்தை அகற்ற வழக்கு தொடங்கியுள்ளனர் .

பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல் துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அந்த இடத்தை இடித்து அகற்றினார் .
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது . ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு 2 கோடியே 20 லட்சம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button