காரத்தொழுவு ஊராட்சியில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட காரத்தொழுவு அழகுநாச்சி அம்மன் கோயில் அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மேலும் காரத்தொழுவு ஊராட்சி முள்ளங்கி வலசு பகுதியில் ரூ.17.50 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் ரூ.7.20 லட்சம் மதிப்பிலும், பாறையூரில் ரூ.7.20 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.