அரசு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவருக்கு தடைவிதித்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ! பல்லடம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கன்னம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்நிலையில் கரைப்புதூர் ஊராட்சி தலைவராக அதிமுகாவை சேர்ந்த ஜெயந்தி கோவிந்தராஜும், கணபதிபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவராக திமுக வை சேர்ந்த நாகேஷ்வரி சோமசுந்தரம் என்பவரும் உள்ளனர். ஒன்றிய கவுன்சிலராக அதிமுக வை சேர்ந்த ஈஸ்வரி கந்தசாமியும் வார்டு உறுப்பினராக சாந்தியும் உள்ளனர்.
இதனிடையே ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ஊராட்சி தலைவர்கள் பெயரோ, படங்களோ இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரண்டு வந்து கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. பின்னர் முறையான தகவல் அளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும், திட்டப்பணி துவக்க விழாவை ஏற்பாடு செய்வதாக அரசு அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உரிய முறையில் தலைவர்களை முன்கூட்டியே அணுகி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. பிடிஓ மனோகரனின் அலட்சியத்தால் பொதுமக்கள் கொந்தளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
லட்சக்கணக்கில் செலவு செய்து முடிவடைந்த அரசு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டில் பிடிஓ மனோகரன் கோட்டை விட்டு நிகழ்ச்சியில் வெறும் வட்டமடித்து வட்டாட்சியராக செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாமல் எதிர்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அரசு நிகழ்ச்சியில் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.