தமிழகம்

பல்லடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டா மாறுதல்… : பொங்கி எழுந்த விவசாயிகள்..!

திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வ சிகாமணி. இவருக்கு சொந்தமாக 7.17 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் கிரய பத்திர ஆவணப்படியும், நீதிமன்ற தீர்ப்பு படியும் தெய்வசிகாமணிக்கு பாத்தியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி நிலம் முத்துச்சுப்பிரமணியம் என்பவரது பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தெய்வசிகாமணி வருவாய் துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் மேற்படி முறைகேடாக நடைபெற்ற பட்டா மாறுதலை கொண்டு செட்டில்மெண்ட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி தெய்வசிகாமணி நிலத்தை மோசடியாக ஆவணங்கள் தயாரித்து போலிபட்டா பெயர்மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஏராளமானோர், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தையும், நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே விவசாயிகளிடம் புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியர் ஜீவா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை வட்டமடிக்கும் புரோக்கர்கள் நடமாட்டத்தால் அதிக அளவில் மோசடி நடைபெறுவதாகவும், எனவே புரோக்கர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button