தமிழகம்

பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி என்ன செய்தார் தெரியுமா ?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதை கண்டு விசாரித்துள்ளனர். அப்போது அந்த மூதாட்டி சொன்ன பதில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மூதாட்டி பெயர் பொன்னம்மாள் எனவும் 80 வயதை கடந்த அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயிலில் தூய்மை பணி செய்துகொண்டு அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவு மற்றும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் கோயில் அருகே உள்ள பூட்டப்பட்ட கடைகளின் முன்பு உறங்கிவிட்டு அதிகாலை எழுந்து கோயில் பணிகளை செய்து வருகிறார். கணவர் பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிடவே தனது ஒரே மகன் மனவளர்ச்சிகுன்றிய நிலையில் சித்தூரில் இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுத்தாம்பாளையத்தில் வசித்துவரும் தனது சகோதரி தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணத்தில் இருந்து 25 ஆயிரத்தை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் கொடுத்த பணத்தை சகோதரியிடம் திருப்பி கேட்டபோதெல்லாம் தவணை சொல்லியே காலம் கடத்திவந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து தனியாக மூதாட்டி பொன்னம்மாள் பஸ் ஏறி திருப்பூர் வந்து திருப்பூரில் இருந்து டவுண் பஸ்ஸில் சின்னக்கரைக்கு வந்த பின்பு அங்கிருந்து ஆட்டோவில் வந்து ஆறுமுத்தாம்பாளையம் வந்துள்ளார். பின்னர் தனது சகோதரி வீட்டிற்கு சென்று கொடுத்த முழு பணத்தை கேட்டு ள்ளார். பணத்தை தர மேலும் கால அவகாசம் கேட்டுள்ளார் அவரது சகோதரி. இதனால் வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு கோயில் அருகே தட்டுத்தடுமாறி வந்து மூதாட்டி பொன்னம்மாள் அமர்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த அவரது சகோதரி அவரது கையில் இருந்த 2 ஆயிரம் பணத்தை கொடுத்து சாப்பிட சாப்பாட்டையும் தட்டில் வைத்து கொடுத்து சாப்பிட வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 80 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதில் தனது சகோதரியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு 80 கிலோமீட்டர் தளராது வந்து வசூலித்து சென்ற சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button