கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்கிறார், மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம்ப் அருகே மீனவர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான 14 மாவட்டங்களில் இருந்து பல ஆயிர கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முதல்வரின் வருகைக்காக தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
பின்னர் மீனவர் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மீனவர் மத்தியில் பேசிய போது.. மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தப்படும் எனவும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல், கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது.
மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம்,
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது, இனி அந்த தொகை உயர்த்தப்பட்டு 8000 ரூபாயாக வழங்கப்படும்.
45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும், மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும், தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படு, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்படும்,
விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு மீன்வள பல்கலையில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.
கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்படும். 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீனவ சமுதாய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தில் 41 மீனவ சமுதாய மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது என தமிழக முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பத்து சிறப்பு திட்டங்களை மீனவர் மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் அதில் 14 ஆயிரம் பயாளிகளுக்கு 88 கோடியே 90 லட்சம் மதிப்பெட்டியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5000 இருந்து 8000 ஆக வழங்கப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரணத் தொகை மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சத்தீவு இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டப்படும் என பத்து சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மீனவர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதோடு மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.