10 நிமிடங்களில் 25 வகையான யோகாசனம் ! சாதனை புரிந்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே ஆர்.ஜி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் 50 பேர் குழுவாக இணைந்து 10 நிமிடங்களில் அதிகப்படியான யோகாசனங்களை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விழாவிற்கு மரகதம் யோகாலய நிறுவனர் கின்னஸ் சாதனையாளர் டாக்டர் வி.குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி , பள்ளியின் செயலாளர் நந்தினி ரவீந்திரன் ஆகிய இருவரும் துவங்கி வைத்தனர்.
யோகாசனம் பற்றி சிறப்புரையாற்றிய பள்ளியின் நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், அவரை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லட்சுமி மாணவர்களுக்கு யோகாசனம் பற்றிய விளக்கங்களை கூறி ஊக்கப்படுத்தினார்.
மேலும் பள்ளியின் முதல்வர் திருமதி ஆர்த்தி கனகராஜ் கூறுகையில் இதுபோன்ற சாதனைகள் மாணவர்களிடம் ஊக்கத்தையும் , நம்பிக்கையையும் வளர்ப்பதாக எடுத்துரைத்தார். யோகா உலக சாதனையானது 10 நிமிடங்களில் 25 வகையான யோகாசனங்களை குழுவாக மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் அதுவே உலக சாதனையாக அங்கீகரிகப்படுகிறது என்பதாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
ஆர்.ஜி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி பெதப்பம்பட்டியில் முதல் முறையாக குழுவாக இணைந்து 10 நிமிடங்களில் 32 ஆசனங்கள் செய்து உலக சாதனை எனும் இடத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர்களின் யோகாசன நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.