உடுமலை வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல், மூன்று பேர் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி அரளிப்பாறை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கையில் மரக்கட்டைகளுடன் மர்ம நம்பர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. அவர்களிடம் இருந்த கட்டைகளை சோதனை செய்தபோது சந்தன மரம் கட்டைகளை வெட்டி கடத்தியது தெரியவந்தது..
இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாப்பாளர் கணேஷ்ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரள மாநிலம் காந்தலூரைச் சேர்ந்த மயில்சாமி 37, பால்ராஜ் 43, சக்திவேல் 38, என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் மூன்றுபேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பின்னர் கைது செய்து
அவர்களிடமிருந்து 13 கிலோ சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் மூன்று பேரை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் மேற்கொண்டு வருகிறார்.
தி.கார்வேந்தபிரபு