“எவன் செத்தா எனக்கென்ன” ? அராஜகத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி !

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கிருஷ்ணா நகர் என்கின்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா நகர் அலங்கார நுழைவு வாயில் அருகில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி அமைந்துள்ளது. அதை ஒட்டிய முக்கியமான சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக மணல் மூட்டைகள் மற்றும் மணல் போக்குவரத்துக்கு இடையூறாக குவிக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டையாலும், மணல் குவியலாலும் விபத்து ஏற்படக்கூடிய நிலை இருந்து வருகிறது.

அந்தப் பகுதி பொதுமக்களின் புகாரின் பெயரில், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜல நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோது,, மழை காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் ஏற்படக்கூடிய சம்பவங்களுக்கு தடுப்பு ஏற்படுத்தும் விதமாக நான் அந்த இடத்தில் மணல் குவியலை குவித்து வைத்திருக்கிறேன். வேறு இடத்தில் வைப்பதற்கு எனக்கு இடமில்லை, அதனால் தான் அங்கு குவித்து வைத்துள்ளேன் என்றார். இது விபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ளதே என கேட்டபோது, எவன் செத்தா எனக்கென்ன என்று மிகவும் பொறுப்பற்ற தன்மையில் பதில் கூறுகிறார்.
பொதுமக்களின் பாதுகாவலனாக விபத்து ஏற்படுத்தாத விதத்தில், மக்களை காக்க வேண்டிய பொறுப்புள்ள ஒரு அதிகாரியின் இத்தகைய பதில் அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது. தங்கராஜ் போன்ற பொறுப்பற்ற அதிகாரிகளால் தான் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
சுகதேவ்.