கள்ளக்காதலியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த மருத்துவர் ! “சில நொடிகளில்” திரைவிமர்சனம்
புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகை பூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சில நேரங்களில்”.
கதைப்படி… லண்டனில் சொ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராக ரிச்சர்ட் ரிஷி இருந்து வருகிறார். இவரது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷிக்கு நெருக்கமாகிறார். பின்னர் இவர்களது உறவு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்கிறது. இவரது மனைவி புன்னகை பூ கீதா வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் மதுபோதையில் உல்லாசமாக இருக்கின்றனர். மது போதை ஏறாத காரணத்தால், போதை மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் ரிச்சர்ட் ரிஷியின் மனைவி புன்னகை பூ கீதா தனது தோழிகளுடன் வீட்டிற்கு வருவதாக போன் செய்ய, அவசர அவசரமாக யாஷிகாவை பின் வாசல் வழியாக வெளியே போகச் சொல்லி அனுப்புகிறார். அப்போது இதயத்துடிப்பு நின்று யாஷிகா ஆனந்த் இறந்து போகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட் ரிஷி யாஷிகாவின் உடலை ஒரு மரப்பெட்டியில் மறைத்து வைக்கிறார். மனைவி தனது தோழிகளுடன் வீட்டிற்கு வந்ததும், அவர்களுடன் மது அருந்தி படம் பார்க்கிறார். ஆனாலும் என்ன செய்வதென தெரியாமல் பதட்டத்துடன் காணப்படுகிறார்.
மறைத்து வைத்த யாஷிகாவின் உடலை என்ன செய்தார் ? அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களை எப்படி சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை…
படத்தில் அழகான கணவன், மனைவியாக ரிச்சர்ட் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் இளமையுடன் அருமையாக நடித்திருக்கிறார்கள். படம் பார்ப்பவர்களை லண்டனுக்கே சென்று சுற்றிப் பார்த்த அனுபவத்தை தருமளவுக்கு, மிகவும் நேர்த்தியாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
புன்னகை பூ கீதா பல வருடங்களுக்கு முன் பார்த்தது போல், இன்றும் இளமையுடன் தனது நடிப்பை வெளிப்படத்தியதுடன், அற்புதமாக நடனமாடி அசத்தியிருக்கிறார். கணவன், மனைவி இருவரும் விட்டுக்கொடுக்காமல் அன்பாக இருந்தாலும், மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் ஏன் உறவு ஏற்பட்டது ? என்பதையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எவ்வாறு கையாண்டார் என்பதை தனது திரைக்கதையின் மூலம், படம் பார்ப்பவர்கள் சோர்வடையாமல் கதையை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குனர்.