விமர்சனம்

உறவின் மேன்மையை உணர்த்துகிறதா ? “உடன்பால்” படத்தின் திரைவிமர்சனம்

ஆஹா தமிழ் ஒரிஜினல் ஓடிடியில் கே.வி. துரை தயாரிப்பில், கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் லிங்கா, அபர்ணா, விவேக் பிரசன்னா, காயத்ரி ஷங்கர், சார்லி, மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும் படம் “உடன்பால்”.

கதைப்படி… பர்மன் தனது தாயின் நினைவு நாளுக்கு தங்கை கண்மணியை வரவழைக்கிறான். பின்னர் தாயின் படத்தின் முன் படையலிட்டு சாமி கும்பிட்டபின் தந்தை விநாயகத்திடம் தொழில் சரியில்லாததால் கடன் அதிகரித்ததாகவும், வேறு தொழில் துவங்குவதற்காகவும் வீட்டை விற்றுத்தருமாறு தங்கையை வைத்து கேட்க வைக்கிறான். அதற்கு வாழும் வீட்டை விற்றுவிட்டு தெருவில் நிற்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்துவிட்டு அருகிலுள்ள காம்ப்ளெக்ஸிற்கு சென்றுவிடுகிறார் விநாயகம். வீட்டை விற்பனை செய்து தங்கைக்கு கொடுத்தது போக கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்த  பரமன் என்ன செய்யலாம் என யோசித்து அமர்திருக்கிறான்.

சிறிது நேரத்தில் பழமையான அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் அரசாங்கம் வழங்க இருப்பதாக தொலைக்காட்சியில் செய்தி வருகிறது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பரமன், டீவியின் சத்தத்தை குறைத்துவிட்டு தன் மனைவியிடம் கலந்து பேசுகிறான். பின்னர் தங்கையும் பரமனும் பணத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமாக வாக்குவாதம் செய்து, சமாதானம் ஆகிறார்கள். அதன்பிறகு தங்கையின் கனவரை அழைத்துக்கொண்டு மருத்துவ மனையில் உள்ள பிணவறையில் சென்று பார்த்து வருவதாக சொல்லிவிட்டு கதவைத் திறந்து வெளியே வரும்போது எதிரே அவரது தந்தை விநாயகம் ( சார்லி ).

விநாயகத்தைப் பார்த்ததும் அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். அவரும் ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என கேட்டுவிட்டு பேரக் குழந்தைகளுடன் விளையாடுகிறார். சிறிதுநேரம் கழித்து தனது மருமகள் பிரேமாவிடம் காபி கிடைக்குமா ? என கேட்டு நாற்காலியில் அமர்கிறார். பிரேமா காபியை கொண்டுவந்து பார்க்கும்போது விநாயகம் இறந்துவிட அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

பின்னர் விநாயகத்தின் உடலை நல்லடக்கம் செய்தார்களா ? அல்லது பணத்திற்காக ஏதாவது குறுக்கு வழியில் முயன்றார்களா ? என்பது மீதிக்கதை….

இன்றைய சூழ்நிலையில் உறவுகளை விட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பதையும், பணத்திற்காக உறவுகளை இழக்கவும் தயாராகும் பிள்ளைகளின் மனநிலையை எதார்த்தமான சம்பவங்களுடன் ஒப்பிட்டு காட்சிகளை அமைத்து, இவர்களைப் போல் யாரும் இருக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார் இயக்குனர்.

ஒரு வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் திரைக்கதையை அமைத்து ரசிக்கும்படியாக எதார்த்தமான வசனங்களுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் ஆங்காங்கே லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button