பரமக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி யின் 87வது குருபூஜை விழா !
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 87வது நினைவுநாள், குருபூஜை விழாவாக அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அனைத்து வெள்ளாளர் மகா சபையின் தலைவர் குரு. சுப்பிரமணியன் பிள்ளை தலைமையில், பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வ.உ.சி பள்ளியின் தாளாளர் முனியாண்டி பிள்ளை வரவேற்புரை வழங்க, இருளப்பன் பிள்ளை முன்னிலை வகிக்க, அனைத்து வெள்ளாளர் மகா சபையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து வ.உ.சி பள்ளியில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளியின் பொருளாளர் மகேஷ்வரன் நன்றி கூறினார்.
- உதுமான்