திருச்செந்தூரில் சாமி தரிசனத்திற்கு 1000 ரூபாய் கட்டாயம் ! என்ன சொல்லப் போகிறார் அமைச்சர் சேகர்பாபு ?.!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவம்பர்-18 நாளை மாலை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் இன்றிலிருந்தே திருச்செந்தூர் வரத் தொடங்கியுள்ளனர். கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தந்ததால், முருகனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.
இதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைத்த நிர்வாகி ஊழியர்கள் துணையோடு, ஒரு நபருக்கு 1000 ( ஆயிரம் ரூபாய் ) கட்டாயம் வசூலித்து தரிசனத்திற்கு அனுமதித்துள்ளார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பணம் இல்லை என்பவர்களை வெளியே அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது… தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய முக்கிய பிரமுகர்களின் பெயரைப் பயன்படுத்தி, பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்த நிர்வாகி உள்ளிட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதாரங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியும் அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது. என்ன சொல்லப் போகிறார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ?