திருப்பூரில்.. எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் !

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் , மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ் ஐ ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவில் எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் எஸ் ஐ ஆர் பணிகள் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில், மடத்துக்குளம் சட்டமன்ற தேர்தல் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருமான சதீஷ்குமார், மடத்துக்குளம் வட்டாட்சியர் குணசேகரன், தேர்தல் துணை வட்டாட்சியர் விஷ்ணு, கிராம நிர்வாக அலுவலர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட்டு வரும் BLO பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




