கணவரோடு காதலியை சேர்த்துவைத்த மனைவி, “பரிவர்த்தனை” திரைவிமர்சனம்
எம்.எஸ்.வி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொறி. செந்தில்வேல் தாயாரிப்பில், சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி நடிப்பில், மணிபாரதி இயக்கியுள்ள படம் “பரிவர்த்தனை”.
கதைப்படி… நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரி தோழிகளான சுவாதியும், ராஜேஷ்வரியும் சந்தித்து மனம்விட்டுப் பேசுகின்றனர். சுவாதி திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர் வற்புறுத்தலால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ராஜேஷ்வரி திருமணமாகி கணவருடன் மனம் ஒத்துப் போகாததால் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டபிறகு ராஜேஸ்வரி சுவாதியை அவரது வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு சென்றதும் சுவாதி எதிர்பார்க்காத சில சம்பவங்கள் அரங்கேறுகிறது. இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் அப்படி என்னதான் நடந்தது. இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா ? என்பது மீதிக்கதை…
பள்ளிப் பருவத்தில் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல், திருமணம் செய்து கொண்ட மனைவியுடனும் சந்தோஷமாக வாழ முடியாமல் தவிக்கும் இருக்கமான காதாப்பாத்திரத்தில் நாயகன் சுர்ஜித் நன்றாக நடித்திருக்கிறார். நாயகிகளான சுவாதியும், ராஜேஷ்வரியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கணவனின் காதலுக்காக தனது தாலியைக் கழற்றி கொடுத்து காதலியோடு மனைவி சேர்த்து வைக்கும் காட்சி புதுமையாக இருந்தாலும், இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.