பல்லடத்தில் வேலை வாங்கித் தருவதாக 6 லட்சம் மோசடி செய்ததாக, திமுக பிரமுகர்கள் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர்கள் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து ஏமாற்றியதாக, பல்லடத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண்மணி புகார் மனு அளித்துள்ளார். ஆளும்கட்சி பிரமுகர்கள் பணமோசடி செய்ததாக ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞானாம்பாள் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது… எனது மகன் சூரியபிரசாந்த் B.SC பட்டதாரி. நாங்கள் குடும்பத்துடன் வடுகபாளையம் புதூரில் வசித்து வந்தோம். அப்போது தளபதி முனியன் என்ற நபர் எனது கணவரின் நண்பர், அப்போது என் மகன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்த்த R.தளபதி முனியன் ஏன் படித்த மகனை வேலைக்கு அனுப்பவில்லை என்று என்னிடத்தில் கேட்டார். அதற்கு நான் எனது மகன் அரசு வேலைக்கு தேர்ச்சி பெற படித்து வருகிறான் நன்றாக படிப்பான், வேலை கிடைத்து விடும் என்று கூறினோம். உடனே முனியன் வடுகபாளையம் புதூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தண்டல் (கிராமஉதவியாளர்) வேலை இருக்கிறது. அதற்கு உங்களது மகனை சேர்த்து விடுவோம் என்றார். எப்படி சேர்ப்பது என்று கேட்ட போது எனக்கு அமைச்சரிடம் நல்ல பழக்கம் உள்ளது நான் பெற்று தருகிறேன் என்று கூறினார். நான் சரி என்று சொல்லிவிட்டேன், அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்று கூறினார், எவ்வளவு பணம் என்று கேட்டதற்கு 6 லட்சம் ஆகும் என்றார், நான் இரண்டு தவனையாக 60,000 மற்றும் 5,40,000 ரூபாயை எனக்கு தெரிந்தவரிடம் இருந்து கடன் வாங்கி கொண்டு போய் தளபதி முனியனிடம் கொடுத்தேன்.
23-12-2022 குகன் என்ற நபரை, இவர் தி.மு.க மாணவரணி மாவட்ட துணை தலைவர் என்று அறிமுகம் செய்து வைத்து இவர் அமைச்சரிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று கூறி 6 லட்சம் ரூபாய் பணத்தை தளபதி முனியன் மூலமாக குகனிடம் கொடுத்தோம். அதை பெற்று கொண்ட குகன் நான் கண்டிப்பாக வேலை வாங்கி தந்துவிடுவேன் இல்லை என்றால் உங்களது பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என்றார் நாங்களும் சரிஎன்று கூறிவிட்டு வந்துவிட்டோம். பிறகு ஜனவரி12,2023 ஆம் தேதி நாங்கள் எதிர்பார்திருந்து வேளைக்கு ஆட்களை எடுத்து விட்டார்கள் என்று நாளிதழ்களில் வந்துவிட்டது. உடனே நான் தளபதி முனியனிடம் கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியவில்லை நான் குகனிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறினார், பிறகு 2 நாட்களாக தொடர்பே இல்லை, 2 நாட்கள் கழித்து நீங்கள் குகனிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார் குகனின் போன் நம்பரை கொடுத்தார் முனியன்,
பிறகு குகனை தொடர்பு கொண்டு கேட்டபோது நான் உள்ளே பணம் கொடுத்துள்ளேன் அது வந்தவுடன் உங்களுக்கு பிப்பரவரி 20,2023குள் பணத்தை தந்து விடுகிறேன் என்று கூறினார். நானும் பொறுத்து இருந்தேன், பிறகு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்ட போது தருகிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள் என்றார்.
நான் மென்மேலும் தளபதி முனியன் மற்றும் குகனிடம் கேட்ட போது தருகிறோம், தருகிறோம் என்று கூறி காலம் கடத்தினார்கள். பிறகு பிப்ரவரி மாதம் குகனை சந்திக்க சென்ற போது அவர் அங்கு இல்லை. போனையும் எடுக்க வில்லை, பிறகு குகனே தொடர்பு கொண்டு கொஞ்சம் காத்திருங்கள் என்றார். பிறகு அவரை மீண்டும் தொடர்பு கொண்டபோது கொடுக்கிறேன் என்றார், எப்போது பணம் என்று கேட்டதற்கு பணம் கேட்டால் குடும்பத்தை அழித்து விடுவேன் என்றும் என்னை மிரட்டும் பாணியில் பேசினார், எனது கணவரை வயது வித்தியாசம் இல்லாமல் அவன், இவன் என்று மிரட்டல் விடுகிறார் குகன். இவர்கள் இடத்தில் இதைப்போல பலரும் ஏமாற்ற பட்டு உள்ளனர் ஆனால் வெளியில் கூறவும் காவல் நிலையத்தை அணுகவும் பயப்பட்டு கொண்டு வெளியில் வராமல் உள்ளனர். நாங்கள் தற்போது வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளோம், கடன் பிரச்சனையால் தற்கொலை முடிவில் உள்ளோம்
எனவே சமுகம் அவர்கள் கருத்தில் கொண்டு என்னுடைய பணத்தை மீட்டு எனது குடும்பத்தின் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்து, உயிருடன் வாழ வழி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என மனுவில் கூறப்பட்டுள்ளது.