பிரபல நடிகரின் திமிர் பேச்சு ! இயக்குனர் சங்கம் தடை !
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் நல்ல வசூலை குவித்துள்ளது. முன்னதாக விஷாலின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், வசூலில் சறுக்கியதால் அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராத நிலையில், அவரே சொந்தமாக படங்களைத் தயாரித்து பலகோடி நஷ்டம் ஏற்பட்டதால் கடனாளி ஆனதுதான் மிச்சம். இது அனைவரும் அறிந்ததே..
நீண்ட காலத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்றதால், காரணததை கண்ட மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசி வம்பில் சிக்கிக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது… படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், நான்கு கோடிக்கு குறைவாக முதலீடு செய்பவர்கள் படங்களைத் தயாரிக்க முன்வர வேண்டாம் என பேசியிருக்கிறார்.
விஷாலின் ஆணவ பேச்சால் திரையுலகமே பரபரப்பான நிலையில், “உலகம்மை” திரைப்படத்தின் இயக்குநர் இது சம்பந்தமாக பேசுகையில்.. நடிகர் விஷால் ஆர்வ மிகுதியால் எல்லாம் தெரிந்தவர் போல் பேசி வருகிறார். தமிழ் சினிமாவில் யார் படம் தயாரிக்க வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டியவர் அந்தந்த கலைஞர்களே தவிர, விஷால் அல்ல.
நடிகர் விஷால் சென்ற இடங்களிலெல்லாம் தொடர்ந்து கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்து வரும் நிலையில், அத்தி பூத்தார் போல் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் வெற்றி பெற்றதும் நான்கு கோடிக்கு கீழ் படம் தயாரிக்க கூடாது என்று சொல்வது, அறிவில்லாத ஆர்வ மிகுதியால் தான் பேசியுள்ளார். விஷாலின் இந்த செயலை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் கடுமையான கண்டனத்தையும், விஷாலை வைத்து யாரும் படம் இயக்க கூடாது என தடை விதிக்க வேண்டும் என புகார் அளிக்க இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.
இந்நிகழ்வின் போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர்.கே. கண்ணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் உடனிருந்தனர்.