மாவட்டம்

பொய்யான வாட்ஸ் அப் தகவல்களை நம்பாதீர்கள், பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். வருடம் முழுவதும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் இக்கோயிலில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகனுக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாகவும் 0444 2890021 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம், கேட்பார் அதை சொன்னவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவதாக பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறான பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள் / பொதுமக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கா.சாதிக்பாட்ஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button