“டைனோசர்” படத்தின் திரைவிமர்சனம்
கேலக்ஸி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஶ்ரீ நிவாஸ் சம்பந்தம் தயாரிப்பில், உதய் கார்த்திக், ரிஷி, மாறா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், எம்.ஆர். மாதவன் இயக்கத்தில், ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் “டைனோசர்”.
கதைப்படி… வடசென்னையில் ஒரு ரவுடி கும்பலின் முக்கியமான நபராக திகழும் துரை ( மாறா ஜோதி ), ரவுடி தொழிலை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுக்கிறார். ஆனால் சிறிது தயக்கத்துடன் யோசித்து வருகிறார். அந்த சமயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த குற்றத்திற்காக சரணடையுமாறு ஒரு ரவுடி கும்பல் வற்புறுத்துகின்றனர்.
அப்போது துரைக்காக அவனது நண்பன் தனா ( ரிஷி ரித்விக் ) சரணடைந்து சிறை செல்கிறான். இந்நிலையில் பழைய பகையால் துரை கொலை செய்யப்படுகிறார். துரை கொலை செய்யப்படும் போது தனாவின் தம்பி துரையை காப்பாற்ற போராடுகிறார், ஆனாலும் முடியாமல் போகவே இதுவரை வன்முறை வேண்டாம் என ஒதுங்கி இருந்த மண்ணு ( உதய் கார்த்திக் ) அந்தக் கூட்டத்தை அழிக்க நினைத்து ரவுடியுஷத்தில் இறங்குகிறார்.
துரையைக் கொலை செய்தவர்களை மண்ணு பழி வாங்குகிறாரா ? தனது குடும்பம் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமான பழைய நினைவுவுகளுக்கு விடை தேடினாரா ? என்பது மீதிக்கதை…
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக துரை இறக்கும் காட்சியிலிருந்து மண்ணுவின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. இதுவரை வடசென்னை ரவுடிகள் கதைக்களத்தில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், “டைனோசர்” படத்தில் வித்தியாசமாக காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர்.