விமர்சனம்

“கேப்டன் மில்லர்” திரைவிமர்சனம்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்திப் கிஷன், இளங்கோ குமாரவேல், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள படம் “கேப்டன் மில்லர்”.

கதைப்படி… கிராமத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஈசன் ( தனுஷ் ), ஈசனின் சமூக மக்களை உயர்ந்த சமூகத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்காமல், அடிமைகளாக நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி நடக்கின்றனர். ஆங்கிலேய படைக்களுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பயத்தைப் பார்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்கிறான் ஈசன். அங்கு ஈசனுக்கு கொடுக்கப்பட்ட ராணுவ உடையில் மில்லர் எனப் பெயர் இருக்கிறது. பின்னர் இவரே “கேப்டன் மில்லர்” வைத்துக் கொல்கிறார். ஆனால் தனது கிராம மக்களையே கொன்று குவிக்க நேரிட்டதால் ராணுவத்திலிருந்து வெளியேறுகிறார். அதன்பிறகு கிராமத்திற்குள் போகமுடியாமல் காட்டுப்பகுதியில் தங்குகிறார். பின்னர் தனது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் துணிகிறான் ஈசன்.

இதற்கிடையில் ஈசனின் அண்ணன் செங்கோலன் ( சிவ ராஜ்குமார் ) ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் செய்ததால், ஆங்கிலேய போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதால் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தனது தாயின் மறைவுக்கு கூட வரமுடியாமல் போகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈசன் வெற்றி பெற்றானா ? செங்கோலன் என்ன ஆனார் ? ஒடுக்கப்பட்ட மக்களின் கனவு நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…

படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, சுதந்திர போராட்ட கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று விதமான தோற்றத்தில் தனுஷ் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட காலங்களில், தென்மாவட்டங்களில் இதுபோன்ற ஆயுதங்கள் பயண்படுத்தியிருப்பார்களா ? இவ்வளவு வன்முறை சம்பவங்கள் நடந்தேறி இருக்குமா ? என்கிற சந்தேகம் எழுகிறது. படம் பெரும்பாலான காட்சிகளில் துப்பாக்கி சப்தம் தான் கேட்கிறதே தவிர வசனங்கள் குறைவுதான்.

வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருந்தால் குடும்பத்தோடு பார்க்கும் படமாக கொண்டாடப்பட்டிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button