விமர்சனம்

சென்னையில் நடைபெறும் அந்தரங்க விபச்சாரம் ! “வொயிட் ரோஸ்” திரைவிமர்சனம்

என். ரஞ்சினி தயாரிப்பில் கே.ராஜசேகர் இயக்கத்தில், ஆர்.கே. சுரேஷ், கயல் ஆனந்தி, விஜித், ரூசோ ஶ்ரீதரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வொயிட் ரோஸ்”.

கதைப்படி… படுக்கையறையில் ஒரு பெண்ணிற்கு விச ஊசி செலுத்தி கொலைசெய்து, கண்டந்துண்டமாக வெட்டி பொதுவெளியில் வீசுகிறான் ஒரு சைக்கோ. இதனால் சென்னை நகரமே பரபரப்பாகிறது. நாயகி கயல் ஆனந்தி தன் கனவர், மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோஷமாக வசித்து வருகிறார். அவரது பிறந்தநாளன்று மூன்று பேரும் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புகையில், போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது கனவன் இறந்துவிட, என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கெதியில் நிற்கிறார் கயல் ஆனந்தி.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு நெருக்கடி தருகிறார். பைனான்ஸ் கொடுத்தவர் பணம் தராததால் தன் குழந்தையை கடத்திச்சென்றதோடு, இரண்டு நாட்களில் பணத்தைக் கொடுக்காவிட்டால் நல்ல விலைக்கு குழந்தையை விற்றுவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார். பிரச்சினையிலிருந்து தன் குழந்தையை மீட்க பணத்திற்காக ஒருவரிடம் சென்றபோது அவன் சைக்கோ கொலைகாரன் என்பது தெரியவருகிறது.

கொலைகாரனிடமிருந்து கயல் ஆனந்தி தப்பித்தாரா ? குழந்தை என்னானது என்பது மீதிக்கதை.‌..

சைக்கோ கதாப்பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் நன்றாக நடித்திருக்கிறார். கயல் ஆனந்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சென்னை போன்ற பெருநகரங்களில், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியில் தெரியாமல் நடைபெறும் விபச்சாரம் பற்றியும், அதில் மாட்டிக்கொண்டு தவிக்கும் அப்பாவி பெண்களின் நிலையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சுவாரஸ்யமாக, விறுவிறுப்புடன் கதையை நகர்த்தியிருந்தால் வொயிட் ரோஸ் பேசப்பட்டிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button