முன்னாள் ராணுவ வீரர் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்த போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தார் குடியிருக்கும் பூட்டியிருந்த வீட்டிற்குள் சுவறேரிக் குதித்து போலீசார் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் பகுதியை சேர்ந்த பால்ராஜ், முன்னாள் ராணுவ வீரர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் மனைவி மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் 2 ஆம் தேதி காலை சுமார் 6 மணிக்கு வீட்டின் முன்பாக இரண்டு பேர் நின்றுள்ளனர். பின்னர் ஒருவர் மட்டும் பூட்டியிருந்த வீட்டின் கேட் மீது ஏறி வீட்டினுள் ஏறிக் குதித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது பல்லடம் போலீசார் எனக்கூறியுள்ளனர். பின்னர் வீட்டின் கதவைதட்டி அழைத்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்துபார்த்தபோது கேட்டை தாண்டி உள்ளே வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். வந்திருப்பவர் போலீஸ் என கூறியதோடு சுரேஸ் பாபு இருக்கிறாரா என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சுரேஷ்பாபு வீட்டிற்கு வருவதில்லை என கூறிவிட்டு என்னவென்று விசாரித்தபோது தகவல் எதுவும் கூறாமல் போலீசார் சென்றுவிட்டனர். பின்னர் திரும்பவும் பால்ராஜின் வயதான மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த பால்ராஜின் மகனிடம் விசாரித்துவிட்டு அவரது செல்போன் எண்ணையும் வாங்கிச்சென்றுள்ளனர். இந்நிலையில் எதற்காக போலீசார் சுரேஷ்பாபுவை தேடுகின்றனர் என்பதே தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.
விசாரணைக்காக குடியிர்ப்பு பகுதிக்குள் செல்லும் போலீசார் எதற்காக யூனிபார்ம் அணியாமல் சென்றனர்? கேட் பூட்டியிருந்த வீட்டில் சுவர் ஏறிக்குதித்து போலீசார் விசாரணை செய்யலாமா? வழக்கு விபரம் என்னவென்றே கூறாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்ளலாமா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவராக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் ஐயமில்லை, ஆனால் வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்மணிகள் அச்சப்படும் அளவிற்கு விசாரணை செய்வது எதனால்? மேலும் நாட்டிற்காக உழைத்து ஓய்வுபெற்ற பின் காலமான ராணுவ வீரரின் குடும்பத்தின் வீட்டில் போலீசார் ஏறிக்குதித்து விசாரணை செய்தால் சாமானிய மக்களின் நிலை என்ன???
மேலும் சம்பந்தப்பட்ட வீட்டில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தும் எதனால் அதனை ஆய்வு செய்யாமல் குடும்பத்தாரை குறிவைத்து விசாரணை நடத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் போலீசார் வீட்டில் எட்டிக்குதிக்கும் வீடியோ காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.